Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சட்டென்று கை கால் மறுத்துப் போகுதா?? இரண்டு வாரம் இந்த தண்ணீரை குடித்துப் பாருங்கள்!!

சட்டென்று கை கால் மறுத்துப் போகுதா?? இரண்டு வாரம் இந்த தண்ணீரை குடித்துப் பாருங்கள்!!

ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கால்கள் மறுத்துப் போவது சாதாரணம். சமயங்களில் சிறிது நேரமே அமர்ந்திருந்தாலும், இந்நிலை ஏற்படுகிறது. ஒரு விதத்தில், இந்த அறிகுறி, மனிதனின் உடல் உபாதைகளை தெரிவிப்பதால், பக்கவாத நோயிலிருந்து முன்னரே விடுபடலாம்.நரம்பு செயல்பாடுகளில், குறையோ அல்லது இழப்போ ஏற்படும் போது, கை, கால்கள் மறுத்துப் போகின்றது.

நீண்ட நேரம் கால்களை மடக்கியவாறு உட்கார்ந்திருக்கும் போது, கால்களை தொங்கவிட்ட நிலையில் உட்கார்ந்து பணி செய்யும் போது தொலைதூர பயணங்களின் போதும் கை கால்கள் மறுத்து போவதை உணரலாம்.

இந்த உணர்வின்மை கை கால் மறுத்து போதல் மற்றும் கூச்ச உணர்வுக்கான காரணங்கள் நோய் என்று சொல்லாவிட்டாலும் இவை அடிக்கடி ஏற்பட்டால் அது உடலில் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இது கை கால்களில் மட்டுமல்ல உடலில் எங்குவேண்டுமானாலும் வரலாம்.

இந்த கை கால் மறுத்து போதல் பெரும்பாலும் நமது உடலில் நீர்ச்சத்து குறைவால் ஏற்படும்.

அதிலும் இன்றைய காலகட்டத்தில் நாம் அதிக அளவில் துரித உணவுகளையே உண்பதால் அதில் அதிக காரம் புளிப்பு சேர்க்கப்படுவதால் இந்த கை கால் மறுத்து போதல் பிரச்சனை ஏற்படுகின்றது.

இவ்வாறு கை கால் மறுத்துப் போவதை நாம் இந்த ஒரு தேநீரை குடிப்பதன் மூலம் ஒன்று அல்லது இரண்டு வாரங்களிலேயே சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்

மிளகு

சீரகம்

ஓமம்

பட்டை

செய்முறை

1: ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீரை ஊற்றி சூடு பண்ணவும்.

2: பின்பு ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் ஓமம் மற்றும் 2 அல்லது 3 பட்டைகள் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

3: அரைத்த இந்த பொடியை அந்த சூடு படுத்திய தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும்.

4: இரண்டு கிளாஸ் அளவுள்ள அந்த தண்ணீர் ஒரு கிளாஸ் அளவிற்கு வரும் வரை நன்றாக சுண்ட விடவும்.

5: பின்பு அவற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேநீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம் இல்லையென்றால் இரவு படுக்கும் பொழுது பத்து நிமிடங்களுக்கு முன்னால் குடிக்கவும்.

இவற்றை வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை தொடர்ச்சியாக குடித்து வந்தால் ஒன்று அல்லது இரண்டு வாரத்திலேயே நல்ல மாற்றத்தை பார்க்க முடியும்.

Exit mobile version