நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டியானது இன்று(புதன் ) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் பெங்களூருவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு டெஸ்ட் போட்டியானது 5 நாட்கள் நடைபெறும். ஆனால் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றன.
இதே போன்று கடைசியாக நடந்து முடிந்த பங்களாதேஷ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் போது முதல் மூன்று நாட்கள் மழை காரணமாக நடைபெறவில்லை , ஆனால் கடைசி இரண்டு நாட்கள் சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் இந்த போட்டியில் பெங்களூரு மைதானத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த போட்டி நடைபெறுமா அல்லது ரத்தாகுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த மைதானமானத்தின் ஆனது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வலைப்பயிற்சியில் சுழற்பந்தினை எதிர்கொள்ள தீவிர பயிற்சியை மேற்கொண்டார். மேலும் சுழற்பந்து வீச்சாளர்கள் 3 பேரை ப்ளேயிங் 11யில் விளையாட வைக்க முடிவு செய்திருந்தார். ஆனால் மழை பெய்த காரணத்தினால் பிட்ச் வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறும் , சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று கடினமாக இருக்கும் என்பதால் ரோஹித் சர்மாவின் பிளான் சொதப்பியது.
எனவே இந்த மழையின் காரணமாக போட்டி நடைபெறுமா ? நடைபெற்றால் அணியின் ப்ளேயிங் 11-ல் மாற்றம் ஏற்படுமா ? என பல கேள்விகள் எழுந்துள்ளன.