Cricket: நடந்துகொண்டிருக்கும் இந்தியா நியூசிலாந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெறுமா விக்கெட்டுகளை இழந்து வரும் இந்திய அணி.
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் இந்த தொடரை இழக்க நேரிடும்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. முதல் போட்டியில் சரியாக பேட்டிங் செய்யாத காரணத்தால் முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதுவே நியூசிலாந்து அணிக்கு வெற்றி பாதையை வகுத்தது.
இதனை தொடர்ந்து நேற்று தொடங்கியது இரண்டாவது போட்டி இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த மைதானத்தில் முதல் நல ஆட்டம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் ஆனால் இந்திய அணி டாஸ் தோற்றதால் பந்து வீச்சினை சிற்பக செய்ய முடிவெடுத்து களமிறங்கியது.முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 259 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதில் புதிதாக அணியில் சேர்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர், அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார் இது இந்திய அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. நேற்றைய ஆட்ட முடிவில் 16 ரன்கள் எடுத்து 1 விக்கெட் இழந்திருந்தது.
இன்று தொடங்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்,கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளும், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர். தற்போது 107 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து உள்ளது இந்திய அணி.இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.