TAMILNADU: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை பதவி விலக சொன்ன மத்திய இணை அமைச்சர் எல் முருகன்.
தமிழக ஆளுநர் சமீபத்தில் கலந்து கொண்ட விழாவில் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.அப்போது தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.
திராவிடம் என்ற சொல் வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்தது. இதனால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உதயநிதி பங்கேற்று சான்றிதழ் வழங்கினார். இதில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதை பாடிய அரசு பெண் ஊழியர்கள் பாடலை பிழையுடன் பாடியுள்ளனர்.
அதனால் பாடி முடிந்ததும் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் பாட உத்தரவிட்டார். அதை தொடர்ந்து மீண்டும் பாடப்பட்டது. இவ்வாறு தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மதிய இணை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 முறை தவறாக தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது இதற்கு தமிழக முதல்வர் என்ன பத்தி சொல்ல போகிறார்கள். துணை முதலமைச்சர் பதவி விலகுவாரா? இவ்வாறு தமிழ் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்க மாட்டார்களா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.