Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகக் கோப்பை தொடர் 2023… இந்தியாவில் விளையாட ஒரு வழியாக சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்!!

 

உலகக் கோப்பை தொடர் 2023… இந்தியாவில் விளையாட ஒரு வழியாக சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்…

 

இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்று விளையாடுவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இந்தியாவில் தொடங்கவுள்ளது. இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடர் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நடப்பாண்டு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவது காரணமாக பாகிஸ்தான் அணி பங்கு பெறுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. மேலும் அவ்வாறு பங்கேற்றால் பாகிஸ்தான் அணிக்கான போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா எனவும் பேசப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் இந்திய நாட்டில் நடைபெறும் 50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்று விளையாடும் என்று பாகிஸ்தான் அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் அரசு “விளையாட்டு எர்பது அரசியலுடன் இணையக்கூடாது என்ற கொள்கையை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கடைபிடித்து பின்பற்றி வருகின்றது. இந்த கொள்கையின் காரணமாக இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்று விளையாடுவதற்கு இந்தியாவிற்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் உறவுகள் இது மாதிரியான விளையாட்டுத் தொடர்களுக்கு குறுக்கீடாக இருக்காது என்பதை பாகிஸ்தான் அரசு நம்புகின்றது. அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியிடமும் இந்திய அதிகாரிகளிடமும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இந்திய நாட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான முழு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு எதிர்பார்க்கின்றனர். இந்தியாவிற்கு பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக அனுப்பும் பாகிஸ்தான் அரசின் இந்த முடிவு நாட்டின் பொறுப்பான அணுகு முறையை காட்டுகின்றது” என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version