உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுதம் டன் நகரில் இன்றைய தினம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் ஆரம்பமாகிறது.
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பொதுவான ஒரு இடத்தில் விளையாட போகும் முதல் டெஸ்ட் போட்டி இதுதான் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் இதுவரை வெற்றி பெற்றது இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல இங்கிலாந்து அணி சென்ற 2 உலக கோப்பை போட்டிகளில் இறுதிச் சுற்றில் தோல்வியை சந்தித்து இருக்கிறது ஆகவே இந்த இரண்டு அணிகளும் ஐசிசி கதாயுதத்தை கையில் வாங்குவதற்கான தருணத்திற்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது .இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீது அதிக எதிர்பார்ப்பு தற்சமயம் எழுந்து வருவதாக சொல்லப்படுகிறத
இந்த சூழலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எழுதியதற்காக இந்திய அணியில் விளையாட இருக்கின்ற 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ அறிவித்திருக்கின்றது. அதில் விராட் கோலி கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அணி வீரர்கள் விவரம் வருமாறு விராட் கோலி, ரோகித் சர்மா, புஜாரா, சுப்மன் கில், ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்தர் ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி உள்ளிட்டோர் இந்த அணியில் இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்தர் ஜடேஜா உள்ளிட்ட இருவரும் அணியில் இடம் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த்சர்மா, ஜஸ்பிரித்பும்ரா, முகமது ஷமி, உள்ளிட்டோர் விளையாட இருக்கிறார்கள்.
நியூசிலாந்து அணியின் சார்பாக கேன் வில்லியம்சன், டாம் பிளண்ட்ஸ், டிரென்ட் போல்ட், டேவன் கான்வே, அஜாஸ், ஹென்றி ஜெமிசன், ஹென்றி நிக்கோலஸ்,டிம் சவுதி, ராஸ் டைலர், நீல் வாக்னெர், வாட்லிங், உள்ளிட்டோர் களம் இருக்கிறார்கள்.