cricket: இந்திய அணி தற்போது விளையாடி வரும் நிலையில் விளையாடினால் உலக கோப்பை கனவு வெறும் கனவுதான்.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் இந்த 4 வது போட்டியானது மிக முக்கியமான போட்டியாக பார்க்கபடுகிறது. இந்த போட்டி மற்றும் அடுத்து நடக்க உள்ள 5 வது போட்டி என இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும்.
இந்திய அணி கடைசியாக விளையாடிய நியூசிலாந்து தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து மோசமான சாதனை செய்தது. இதனை தொடர்ந்து இறுதி போட்டிக்கு செல்ல ஆஸ்திரேலியா தொடரில் மொத்தம் நடக்கவுள்ள 5 போட்டிகளில் 4 போட்டியில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தது.
ஆனால் இந்த தொடரில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று மூன்றாவது போட்டியில் சமன் செய்தது. இநிலையில் நடைபெற்று வரும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் மேலும் அடுத்து நடக்கவுள்ள போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். இதனால் இந்திய அணி இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்கு செல்லும்.
ஒரு வேலை இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் இந்த கோப்பை கனவை இழக்கும். ஒரு போட்டியில் வென்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலோ அல்லது இரு போட்டியும் சமனில் முடிந்தாலோ இலங்கை ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டும், மேலும் தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் வெல்ல வேண்டும்.