வங்கதேசத்திடம் உலகக்கோப்பையை பறிகொடுத்த இந்தியா:ரசிகர்கள் சோகம்!

0
133

வங்கதேசத்திடம் உலகக்கோப்பையை பறிகொடுத்த இந்தியா:ரசிகர்கள் சோகம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்ட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை இழந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு மாதமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இதில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி எளிதாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதேப்போல வங்கதேசமும் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. ஏற்கனவே 4 முறை கோப்பையை வென்றுள்ள இந்திய அணி இந்த முறையும் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே ஆமைப் போல ஊர்ந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தவிர மற்ற அனைவரும் சொதப்பினர். இதனால் அவரால் கூட அதிரடியாக விளையாட முடியாமல் போனது, நிதானமாக விளையாடிய அவர் அரைசதம் கடந்தார். இதனால் இந்திய அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஜெய்ஸ்வால் மட்டும் அதிகபட்சமாக 88 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 178 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் வீரர்கள் நிதானமாக விளையாடினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தாலும் ஆட்டம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டனர். இதற்கிடையில் மழைக் குறுக்கிட்டதால் இலக்கு 171 ரன்களாக குறைக்கப்பட்டது. 42.1 ஓவர்களில் நிர்ணயிக்க பட்ட் இலக்கை அந்த எணி எட்டி முதல் முறையாக உலகக்கோப்பையைத் தட்டிச் சென்றது. அந்த அணி சார்பாக இமான் 47 ரன்களும் அக்பர் அலி 47 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர்.

இந்தியா சார்பில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டது இந்திய ரசிகர்களுக்கு ஆதரவு அளித்தது.