வங்கியில் இப்படியும் பணம் பெற்றுக் கொள்ளலாம்!! பலரும் அறியாத ஒன்று!!

0
145

வங்கியில் இப்படியும் பணம் பெற்றுக் கொள்ளலாம்!! பலரும் அறியாத ஒன்று!!

நாம் வங்கியில் பணம் எடுப்பதற்காக செல்லும்போது வங்கி திவால் ஆகிவிட்டது என்றால் எப்படி பணத்தை எடுப்பது என்று ஒரு சிலருக்கு தெரியாது. இவ்வாறு வங்கியில் திவால் ஆகிவிட்டது என்றால் டி ஐ சி ஜி யில் இருந்து அந்த நபருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

அதாவது நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கக்கூடிய வங்கியில் திவால் ஆகிவிட்டது என்றால் ஐந்து லட்சத்திற்கு குறைவாக நாம் எவ்வளவு பணம் வைத்திருக்கிறோமோ அது வழங்கப்படும். அதுவே 5 லட்சத்திற்கு மேல் நம் அக்கவுண்டில் பணம் வைத்திருந்தால் ஐந்து லட்சம் மட்டுமே வழங்கப்படும்.

ஆர் பி ஐ யின் ஆராய்ச்சி படி 98 சதவிகிதம் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது அக்கவுண்டில் 5 லட்சத்திற்கும் மேல் பணத்தை போடுவது கிடையாது. அதனாலே வங்கி திவால் ஆகிவிட்டால் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகைய தொகையானது தற்பொழுது தான் ஐந்து லட்சமாக தரப்படுகிறது.

இதற்கு முன்பு ஒரு லட்சம் மட்டுமே இன்சூரன்ஸ் ஆக வழங்கப்பட்டு வந்தது. நம் வங்கி திவால் ஆகிவிட்டது என்றால் இந்த ஐந்து லட்சம் ரூபாய் நமக்கு கிடைப்பதற்கு 90 நாட்கள் ஆகும். இந்த டி ஐ சிஜி சி க்கு வங்கியானது ஒரு இன்சூரன்ஸ் தொகையை கட்டி வரும்.

அது எதற்கு என்றால் தங்கள் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பணம் திவால் ஆகிவிட்டது என்றால் நீங்கள் 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பதற்கான ஒரு ஒப்பந்தம் தான் அது. எனவே டி ஐ சி ஜி சி தான் இந்த தொகையை வாடிக்கையாளருக்கு வழங்கும் இதனாலேயே இதற்கு 90 நாட்கள் ஆகும்.

இதற்கான விதிமுறைகளின் படி ஒரே பெயரில் வேறு வங்கிகளில் அக்கவுண்ட் ஓபன் செய்து வைத்திருந்தாலும் 5 லட்சத்திற்கு மேல் பணம் வைத்திருந்தாலும் இந்த இன்சூரன்ஸ் தொகையானது 5 லட்சம் மட்டுமே வழங்கப்படும்.

அதுவே நம் உறவினர்களின் பெயரில் வேறு வேறு அக்கௌன்ட் ஓபன் செய்து வைத்திருந்தால் ஒவ்வொரு அக்கவுண்ட் இருக்கும் இந்த இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். இன்சூரன்ஸ் தொகை 90 நாட்களில் வழங்கப்பட்டாலும் அக்கவுண்டில் இருந்த மொத்த பணமும் கைக்கு வருவதற்கு ஒரு வருடங்கள் கூட ஆகலாம். வங்கி திவால் ஆவதற்கான காரணம் என்னவென்றால் வாடிக்கையாளர்கள் வங்கியில் லோன் வாங்கிவிட்டு அதனை கட்டாமல் விடுவதனால் வங்கிக்கு வருமானம் இல்லாமல் கடன் அதிகமாகி இந்த வங்கியை யாராவது வாங்கிக் கொள்வார்களா என்னும் பட்சத்தில் வங்கியானது திவால் ஆகிவிடும்.