Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீயெல்லாம் நகத்தின் அழுக்கிற்கு கூட தகுதி அல்ல!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்

You don't even deserve the dirt of your fingernails!! BJP leader is obsessed!!

You don't even deserve the dirt of your fingernails!! BJP leader is obsessed!!

நீயெல்லாம் நகத்தின் அழுக்கிற்கு கூட தகுதி அல்ல!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொண்டர்களிடம் பேசியதாவது, பிரதமர் மோடியை பற்றி எல்லாம் பேசிவிட்டோம்.

எனவே திமுக கட்சியை பற்றி பேசாமல் இருக்க நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். எனவே பேசுகிறேன், கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஒரு அமைச்சர் உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தான்.

அவரைப்பற்றி உங்களுக்கு எல்லாம் நன்றாகவே தெரியும். பிரதமர் மோடி பாராளுமன்றத்தை கட்டி அதற்கு அழகு பார்ப்பதற்காக தமிழகத்தினுடைய அடையாளமாக தமிழக கலாச்சாரத்தின் அடையாளமாக செங்கோலை வைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார்.

பிரதமர் மோடி அவர்கள், பாராளுமன்றத்தின் முன்பு கீழே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார். இந்த பதிவை மனோ தங்கராஜ் போட்டு மூச்சி இருக்கா? உயிர் இருக்கா? என்று கேட்கிறார்.

இவர்களையெல்லாம் கடலில் கல்லை கட்டி இறக்கினால் கூட உடல் உள்ளே போகாது. ஏனென்றால் இவர்கள் உடலை கடலே ஏற்றுக்கொள்ளாது. அப்படி ஒரு கொடூரமான மனம் படைத்தவர் இந்த அமைச்சர் மனோ தங்கராஜ்.

அண்ணா ஒரு அரை நாள் மட்டும் நீங்கள் கண்டுக்கொள்ளாமல் இருங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று தர்மராஜ் அண்ணன் கூறினார். இந்த மாவட்டத்தில் இருக்கின்ற தலைவர்களையும், தொண்டர்களையும் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது.

மனோ தங்கராஜ் அவர்களுக்கு ஒரு விஷயத்தை மட்டும் கூற நினைக்கிறன், அதாவது மோடி அவர்களின் காலில் இருக்கக்கூடிய நகத்தின் அழுக்கிற்கு கூட நீங்கள் தகுதி வாய்ந்தவர் அல்ல என்று பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version