Cricket: டி 20 போட்டிகளில்அதிகபட்ச ரன்களை கடந்து சாதனை படைத்த ஜிம்பாப்வே அணி
ஆடவர் டி 20 உலக கோப்பை ஆப்பிரிக்கா துணை பிராந்திய தகுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி அதிரடியாக விளையாடியது.
இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. சிக்கந்தர் ராசா 33 பந்துகளில் சதம் அடித்தார். அவர் ஆட்டத்தின் முடிவில் 15 சிக்சர்களுடன் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் முடித்தார்.
மேலும் உள்ள வீரர்கள் 12 சிக்சர் அடித்தனர் . இதுவரை டி 20 போட்டிகளில் நேபாளம்-314 ரன்களும், இரண்டாவது இந்திய-297 ரன்களும் எடுத்திருந்தது. ஆனால் இந்த சாதனையை முறியடித்து முதல் இடத்தில் வரலாற்று சாதனை படைத்தது ஜிம்பாப்வே அணி.
ஜிம்பாப்வே அவர்கள் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிறந்த நோக்கத்தை வெளிப்படுத்தியது அதன் காரணமாக சரித்திரம் படைத்துள்ளது. 3.2 ஓவரில் இந்த அணி அரைசதம் கடந்தது. அணியின் பவர்ப்ளே முடிவதற்குள் டீம் சதம் அடித்தது. இந்த இன்னிங்ஸில் மொத்தம் 57 பவுண்டரிகள் அடிக்கப்பட்டது. இது ஒரு டி 20 சாதனையாகும் .
இதில் மேலும் பிரையன் பென்னட் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார், கிளைவ் மாண்டன்டே 17 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். பிறகு களமிறங்கிய சிக்கந்தர் ராசா இந்த போட்டியின் நட்சத்திர வீரராக மாறினார், அவர் இந்த போட்டியின் மூலம் டி 20 போட்டிகளில் இரண்டாவது அதிவேக சதத்திற்கு சொந்தக்காரர் ஆனார்.