இன்றைய ராசி பலன்கள்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுடைய வெளியுலகத் தொடர்பு விரிவடையும் நாள். விடியற்காலையிலேயே நல்ல தகவல்கள் வந்துசேரும். வெளிநாட்டு வாய்ப்புகள் கைகூடும், தொழிலில் புதிய மாற்றங்களை செய்ய முயற்சி செய்வீர்கள்.

ரிஷபம்

தொழிலில் இருந்த போட்டிகள் நீங்கும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்புடன் நற்காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள், அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

மிதுனம்

இன்று தங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். குடும்ப மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. எவ்வாறு நடக்குமோ என நினைத்த காரியம் நல்லபடியாக நடந்தேறும்.

கடகம்

இன்று தங்களின் விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள், ஆரோக்கியத்துக்கு தெளிவான சிந்தனை தோன்றும், உத்தியோகத்தில் உங்களுடைய செயல்பாடுகள் மேல் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும்.

சிம்மம்

தன்னம்பிக்கையுடன் தைரியமும் தேவைப்படும் நாள். பண வரவு எவ்வளவு வந்தாலும் உடனுக்குடன் விரயம் உண்டாகும். எந்த ஒரு முடிவாக இருந்தாலும் குடும்பத்தினர்களை ஆலோசனை செய்து பிறகு எடுப்பது மிகவும் நன்று.

கன்னி

இன்று தங்களுடைய விருப்பங்கள் யாவும் நிறைவேறும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்ச்சியடைவீர்கள், முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் உண்டாகும், மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

துலாம்

இன்று தங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். மனக்கசப்புகள் நீங்கும் உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள், ஆதாயம் கொடுக்கும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

விருச்சிகம்

இன்று தாங்கள் பரபரப்பாக செயல்பட்டு பாராட்டுகளை பெறும் நாள். மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி அதிகரிக்கும், தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும், பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று தங்களுடைய நட்பு வட்டாரம் அதிகரிக்கும் நாள். கடனாக கொடுத்த தொகையை வசூலாகும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள், தொலைபேசி மூலமாக தொழில் ரீதியான எதிர்பார்த்த தகவல் வரலாம்.

மகரம்

இன்று தங்களுக்கு யோகமான நாள். உறவினர்கள் பகை நீங்கும், உடல் நலனில் தெளிவு பிறக்கும், வளர்ச்சிக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள், பரிமாற்றத்திலிருந்து வந்த சிக்கல் நீங்கும், நூதன பொருள் சேர்க்கை உண்டு.

கும்பம்

இன்று தங்களுக்கு இனிமையான நாள். இல்லம் தேடி நல்ல தகவல்கள் வந்துசேரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது தொடர்பாக சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நேற்றையதினம் ஏற்பட்ட பிரச்சனை இன்று நீங்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு ஆதாயம் கொடுக்கும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும், புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.