என் தம்பிக்காக என் உயிரையும் தியாகம் செய்யத் தயார்! பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி!

Photo of author

By Sakthi

உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.. இந்தத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்ததாவது, காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நலிவடைந்து வருகிறது. இதனை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், சேர்ந்து மேலும் வலுவிழக்க செய்கிறார்கள் சகோதர சகோதரிகள் இருவரும் சேர்ந்து கொண்டு கட்சி இருந்த இடமே தெரியாமல் ஆக்கிவிடுவார்கள்.

அதோடு இருவருக்குமிடையே தீவிர கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்திருப்பதாவது, என்னுடைய சகோதரர் ராகுல் காந்திக்கு நான் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டேன். அதே போல அவரும் எனக்காக அதையே செய்வார் எங்களுக்குள் பிளவிருப்பதாக சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

இவை அனைத்தும் அப்பட்டமான பொய் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் யார் இருந்த இடம் தெரியாமல் போக போகிறார்கள் என்பது தெரியவரும். பாஜகவில் தான் முதல் கருத்து வேறுபாடு அதிகமிருக்கிறது. எங்களிடமில்லை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடி அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது என்பது நாடறிந்த ஒன்று என்று அவர் தெரிவித்திருக்கிறார்.