ஒரு நாள் இரவில் பெய்த மழை!! 176 பேர் மரணத்தால் அதிர்ச்சியில் மூழ்கிய நாடு!!
ஒரே ஒரு நாள் இரவில் பெய்த மழை ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 176 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் காங்கோ நாட்டு மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடான காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் தெற்கு கிவு மாகாணத்தில் திடீர் என்று இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழையால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் நிலச் சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கு மற்றும் நகலச் சரிவுகளில் சிக்கி அங்கு 176 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 5000 வீடுகள் இந்த மழை ஏற்படுத்திய பாதிப்பால் சேதமடைந்துள்ளது.
மழை ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.