கணவனின் உண்மை முகம்! மனைவி செய்த புகார்!

Photo of author

By Hasini

கணவனின் உண்மை முகம்! மனைவி செய்த புகார்!

தற்போதெல்லாம் எது? எதற்காக? என்றெல்லாம் இல்லாமல் வீட்டிற்கு ஒரு மனைவி மற்ற படி வெளியில் யாராக இருந்தாலும் பிடித்து இருக்கிறது.உன்னை காதலிக்கறேன் என யாரிடமாவது கூறி அவர்களை கைக்குள் வைத்து கொள்ளும் சம்பிரதாயம் நிறைய அதிகரித்து விட்டது.மனைவியும் வேண்டும் வெளியில் அந்த உறவும் வேண்டும் என்று ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு வாழ்கின்றனர்.

இந்தி நடிகை நிஷா ராவல், தனது கணவரும், நடிகருமான கரண் மேஹ்ரா மீது மும்பை போலீசில் புகார் அளித்தார். அதில் தன் கணவர் தன்னை அடித்து சுவரில் தள்ளியதாகவும், இதில் தனது தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என்றும் மனுவில் கூறி இருந்தார்.இதையடுத்து கரண் மேஹ்ரா கைதாகி தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.

இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நிஷா ராவல் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் அவர் பேசும்போது, நானும், கரண் மேஹ்ராவும் 14 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளோம். எங்களுக்குள் யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் நடந்துள்ளன. கரண் மேஹ்ராவுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது. அதுபற்றி முதலில் எனக்கு தெரியவில்லை.

இப்போது எனக்கு தெரியவந்ததும் கரணிடம் கேட்டேன். அதற்கு ஆமாம் என்றார்.அந்த பெண்ணை காதலிப்பதாகவும், அவளோடு உறவு வைத்திருப்பதாகவும் கூறினார். இதுகுறித்து அவரது பெற்றோரிடமும் தெரிவித்தேன். கரண் கள்ளத்தொடர்பை விட்டு விட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டால் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து வாழ தயாராக இருக்கிறேன் என்றார்.