கனவு பலிக்கவில்லை என்பதால் அண்ணாமலை இப்படி பேசுகிறார்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு! 

0
154
Annamalai talks like this because the dream did not work! AIADMK General Secretary Edappadi Palaniswami speech!
Annamalai talks like this because the dream did not work! AIADMK General Secretary Edappadi Palaniswami speech!
கனவு பலிக்கவில்லை என்பதால் அண்ணாமலை இப்படி பேசுகிறார்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!
பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கண்ட கனவு பலிக்கவில்லை என்பதால் தான் அவர் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இதையடுத்து தமிழகத்தில் அதிமுக கட்சி இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று(ஜூன்8) செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் “சட்டப்பேரவை தேர்தல் என வந்தால் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். தமிழகத்தில் திமுக கட்சியும் அதிமுக கட்சியும் மாறி மாறி வெற்றி மற்றும் தோல்வியை சந்தித்து வருகின்றது.
ஆட்சி அதிகார பலத்தையும், பண பலத்தையும் வைத்து கட்சிகள் தேர்தலில் பிரச்சாரம் செய்து வந்தன. அதிமுக கட்சியின் சார்பில் நான் மட்டுமே பிரச்சாரம் செய்தேன். தேமுதிக கட்சி சார்பாக பிரேமலதா அவர்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தார்.
தேர்தலுக்கு முன் நடந்து முடிந்தது பற்றி எல்லாம் பேசக்கூடாது. பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் வென்றிருக்கலாம் என்பது குறித்து பேசக்கூடாது என்று இங்கு நான் கூறிக் கொள்கின்றேன்.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பல கனவுகளை கண்டிருப்பார் போல. தேர்தல் முடிந்த பின்னர் அந்த கனவுகள் பலிக்கவில்லை என்பதால் அண்ணாமலை அவர்கள் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். எதிரிகளுடன் சேர்ந்து சில பேர் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.