கலவரம் தீவிரம் அடைவதால் ராணுவம் குவிப்பு!

Photo of author

By Hasini

கலவரம் தீவிரம் அடைவதால் ராணுவம் குவிப்பு!

உலகம் முழுவதிலுமே மக்கள் மனதில் ஒரு தலைவர் இடம் பிடித்துவிட்டால், அவருக்காக மக்கள் எதுவும் செய்ய தயாராக இருகின்றனர். அவருக்கு எதிராக நாடே செயல்பட்டாலும் அரசு எப்படிப்பட்ட ஆணை அவருக்கு வழங்கினாலும் மக்கள் அவருக்கு ஆதரவாக மக்கள் துணை நிற்கிறார்கள். எப்படிபட்ட நிலையிலும் அவருக்கு துணையாக இருந்து வருகின்றனர்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு கோர்ட் அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட் 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை அடுத்து ஜேக்கப் ஜூமா கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு உள்ளனர். எனினும் கடந்த வாரம் ஜேக்கப் ஜுமா போலீசில் சரண் அடைந்து விட்டார்.

அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையிலும், தொடர்ந்து கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாலும், போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என பல வன்முறைகளில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தீவிரமடைந்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் ராணுவம் வருகிறது.