கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவியே கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்வதும், தனது குழந்தைகளை தாயே கொலை செய்வதும் என இது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுப்பதுண்டு. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது கணவனை துண்டு துண்டாக வெட்டி டிரம்ம்பில் போட்டு சிமெண்ட் போட்டு அடைத்த கோர சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்தது.
அதேபோல், அதே உத்திரபிரதேசத்தில் மனைவி இன்னொருவரை காதலிப்பது தெரிந்த கணவன் கள்ளக்காதலனுக்கே தனது மனைவியை திருமனம் செய்து வைத்த சம்பவமும் நடந்தது. காதலுனுக்காக கணவரை பெண்கள் கொலை செய்வது அதிகரித்து வருவதால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் ஊடகங்களில் தெரிவித்தார்.
இந்நிலையில்தான், கள்ளக்காதல் விவகாரத்தில் தனது மூன்று குழந்தைகளையும் தாயே கொன்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கான மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தெலுங்கானாவில் வசிக்கும் ரஜிதா(35) என்பவருக்கு 3 திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் பள்ளி ரீ-யூனியன் சந்திப்பு நடந்திருக்கிறது. அங்கு ரஜிதா சென்றபோது சிறு வயதில் பள்ளியில் தன்னுடன் 10ம் வகுப்பு படித்த பலரையும் சந்தித்திருக்கிறார். அதில் ஒருவருடன் அவருக்கு காதலும் ஏற்பட்டிருக்கிறது.
எனவே, இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்திருக்கிறார்கள். ரஜிதாவின் கணவருக்கும் அவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் என்பதால் தன்னுடைய வயதுடைய நபருடன் ரஜிதாவுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. அவருடன் சென்று வாழ தனது 3 குழந்தைகளும் தடையாக இருப்பதாக ரஜிஜா உணர்ந்திருக்கிறர். எனவே, 3 குழந்தைகளின் முகத்திலும் தலையனையை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு தயிர் சாதம் சாப்பிடும்போது மூச்சுத்திணறி இறந்துவிட்டார்கள் என நாடகம் ஆடியிருக்கிறார். ஆனால், போலீசாரின் விசாரணையில் உண்மை வெளியே தெரிந்துவிட இப்போது ரஜிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.