குக் வித் கோமாளிக்கு போட்டியாக யார்ரா கோமாளி… களத்தில் இறங்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி…!

0
109

குக் வித் கோமாளிக்கு போட்டியாக யார்ரா கோமாளி… களத்தில் இறங்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி…

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பேட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி யார்ரா கோமாளி என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனை விட குக் வித் கோமாளி இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் நடந்து முடிந்தது. இதையடுத்து தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்காவது சீசனும் நடைபெற்று வருகிறது.

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் நடிகூ வனிதா விஜய்குமார் இறுதிப் போட்டியில் பட்டம் வென்றார். இரண்டாவது சீசனில் கனி திரு அவர்களும் மூன்றாவது சீசனில் நடிகை ஸ்ருட்டிகா அர்ஜூன் அவர்களும் பட்டம் வென்றனர்.

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் இறுதிப் போட்டி வரும் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நான்காவது சீசனில் பட்டம் வென்றவர் நடிகர் மைம் கோபி என்று ஏற்கனவே தகவல் வெளியாகிவிட்டது. இந்நிலையால் விஜய் டிவி நடத்தும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்ச்சிக்கு யார்ரா கோமாளி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சி தொடர்பான சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் யார்ரா கோமாளி நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Previous article73 கிலோ மீட்டருக்கு இரட்டை ரயில்பாதை!! ரயில்வே துறையின் சூப்பர் அறிவிப்பு!!
Next articleஅரசு பள்ளி மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!!  மக்கள் நலவாழ்வுதுறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!