கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள்!!

0
53
#image_title

கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தடைபட்ட காரியம் தானாகவே நடைபெறும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வருமானம் ஓரளவுக்கு நீங்கள் எதிர் பார்த்தபடி கிடைக்கும்.

உத்தியோகத்தில் வேலை பளு குறையலாம். சக ஊழியர்கள் உத்தியோகத்தில் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரம் குழப்பம் இன்றி அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் திறம்பட செயலாற்றுவார்கள். மூத்த வயதை சேர்ந்த நண்பர்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றலாம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு தடைபட்ட காரியம் அருமையாக நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..