கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!! மாஸான தோற்றத்தில் நடிகர் தனுஷ்!!

0
105

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!! மாஸான தோற்றத்தில் நடிகர் தனுஷ்!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் தனுஷ் மாஸான தோற்றத்தில் உள்ளார்.

இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ஜிவி பிரகாஷ் குமார் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

 

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் சிவராஜ்குமார், நடிகர் சந்தீப் கிஷன், நடிகை நிவேதிதா சதீஸ் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நடித்த ஆங்கில நடிகர் எட்வர்ட் சொனென்பிலிக் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

 

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று(ஜூன்30) மாலை 5 மணிக்கு கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

 

அந்த அறிவிப்பின்படி படக்குழு கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று(ஜூன்30) மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் தனுஷ் அவர்கள் கையில் பெரிய துப்பாக்கி ஒன்றை கையில் வைத்து நீண்ட தாடியுடன் எதையோ சாதித்தது போல நின்று கொணடு இருக்கின்றார். நடிகர் தனுஷ் அவர்களின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இனையதளத்தில் வைரலாகி வருகின்றது.