சதம் அடித்த உஸ்மான் க்வாஜா! இரண்டாம் நாள் முடிவில் 311 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்ட நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெர்மிங்க்டன் மைதானத்தில் நடந்து வருகின்றது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கல தேர்வு செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை முதல் நாளில் டிக்ளேர் செய்தது.
முதல் நாள் ஆட்ட முடிவில் 14 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது. டேவிட் வார்னர் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். டேவிட் வார்னரை தொடர்ந்து மார்னஸ் லபச்சானே ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.
தொடக்க வீரர் உஸ்மான் க்வாஜா அவர்களுடன் இணைந்து விளையாடிய டிராவியாஸ் ஹெட் அரைசதம் அடித்து 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேமரூன் கிரீன் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய அலக்ஸ் கேரி அவர்கள் உஸ்மான் க்வாஜா அவர்களுடன் சேர்ந்து பொறுமையாக விளையாடினார். தொடர்ந்து விளையாடிய தொடக்க வீரர் உஸ்மான் க்வாஜா சதம் அடித்தார். மேலும் அவருடன் இணைந்து விளையாடிய அலக்ஸ் கேரி அரைசதம் அடித்தார்.
உஸ்மான் க்வாஜா அவர்கள் சதம் அடித்து 126 ரன்கள்(14 ஃபோர்கள், 2 சிக்சர்கள்) சேர்த்தார். அரைசதம் அடித்த அலக்ஸ் கேரி அவர்கள் 52 ரன்கள்(7 ஃபோர்கள், 1 சிக்ஸர்) சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது ஆட்டநாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்து 82 ரன்கள் பின்தங்கி உள்ளது. இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, ஸ்டூவர்ட் போர்ட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பென் ஸ்டோக்ஸ் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.