சமந்தாவின் பள்ளி பருவ காதல்!! இப்படி ஒரு லவ் ஸ்டோரியா!!

Photo of author

By Jeevitha

Cinema: பள்ளி பருவ காதல் என்றலே அது ஒரு தனி மதிப்பு என்று கூறுவார்கள். தென்னிந்திய திரையுலகில் சமந்தா என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவில் ரசிகர்கள் மனதில் உள்ளவர். இவர் ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய ஸ்கூல் லவ் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.

நாகசைதன்யா மற்றும் சமந்தா இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் சில காலங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் நாக சைதன்யா வேறொரு திருமணம் செய்து கொண்டார். இது மட்டும் இல்லாமல் நடிகர் சித்தார்த்தும் சமந்தாவும் சில காலங்கள் காதலித்து வந்த நிலையில் அவர்களே அதை உறுதி செய்தும், பின்னர் சமந்தா அவரை வேண்டாம் என கூறி விட்டதாக தகவல்கள் பரவின.

இந்த காதலை தவிர்த்து தனது பள்ளி பருவத்தில் நடந்த காதலை சமந்தா தற்போது கூறியுள்ளார். இதில் சமந்தா ஸ்கூல் போயிட்டு வரும் போதும், போகும் போதும் அந்த பையன் தினமும் பின்தொடருவார் என தெரிவித்தார். ஆனால் ஒரு நாள் கூட அந்த பையன் சமந்தாவிடம் பேசவில்லை. ஆனால் சுமார் இரண்டு வருடங்கள் அந்த பையன் பின் தொடர்ந்தார் என கூறினார்.

இந்த நிலையில் சமந்தா ஒரு நாள் ஏன் என்னை தினமும் பின் தொடர்ந்து வரீங்க, ஆனால் ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசமாட்ரீங்க என கேட்ட போது அந்த பையன் நான் உங்களை பின் தொடரவில்லை என கூறினாராம். அதை கேட்ட சமந்தாவுக்கு ஒரே ஷாக். ஆனால் அந்த பையன் எதுவும் சொல்லாமல் போய்விட்டாராம். அப்போது நடந்த நிகழ்வு இன்னும் என் மனதில் உள்ளது மற்றும் அது ஒரு அழகான அனுபவம் என்று சமந்தா வெளிப்படுத்தியுள்ளார்.