சிவகார்த்திகேயனின் மாவீரன், அசோக் செல்வனின் போர்தொழில்… இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானது!!

0
34

 

சிவகார்த்திகேயனின் மாவீரன், அசோக் செல்வனின் போர்தொழில்… இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானது…

 

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த அசோக் செல்வன் நடித்த போர் தொழில் திரைப்படமும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

 

இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம் ஜூலை மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

 

மாவீரன் திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர், நடிகை சரிதா, நடிகர் யோகி பாபு, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் மாவீரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் சிறிது வெற்றி பெற்றது. இந்நிலையில் மாவீரன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

 

அதே போல சிறிய பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற போர் தொழில் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

 

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவான போர் தொழில் திரைப்படம் ஜூன் மாதம் 9ம் தேதி திரையரங்குளில் வெளியானது. போர் தொழில் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார், நடிகை நிகிலா விமல், நடிகர் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இந்த திரைப்படம் மிகச்சிறிய பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. அதைப் போலவே வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

 

இந்நிலையில் போர் தொழில் திரைப்படம் எப்பொழுதுதான் ஓடிடியில் வெளியாகும் ஒன்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தற்பொழுது போர் தொழில் திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.