நடிகர் தனுஷ் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்களின் மகள்… வெளியான அறிவிப்பு!!

0
44

 

நடிகர் தனுஷ் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்களின் மகள்… வெளியான அறிவிப்பு!!.

 

நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கி நடித்து வரும் டி50 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்களின் மகளாக நடித்த நடிகை அனிகா சுரேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாஸம் திரைப்படத்தில் நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள் நடிகை நயன்தாரா அவர்களின் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்த நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள் தற்பொழுது நடிகர் தனுஷ் அவர்களுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் தனுஷ் அவர்கள் இரண்டாவது முறையாக இயக்குநராக இயக்கும் திரைப்படம் டி50 திரைப்படம் ஆகும். டி 50 திரைப்படம் நடிகர் தனுஷ் அவர்கள் நடிகராக நடிக்கும் 50வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ்ஜே சூரியா, நடிகர் காளிதாஸ் ஜெயராம், நடிகர் சந்தீப் கிஷன், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா முரளி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

 

நடிகர் தனுஷ் அவர்கள் டி50 திரைப்படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிக்கவும் செய்கிறார். இதற்கு முன்பு நடிகர் தனுஷ் பா.பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கினார். நடிகர் ராஜ்கிரண் அவர்களுடன் நடிகர் தனுஷ் அவர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

தற்பொழுது நடிகர்.தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள டி50 திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசை அமைக்கவுள்ளார். வடசென்னையை மையமாக வைத்து உருவாகவுள்ள இந்த திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் அவர்கள் மொட்டை அடித்து புதிய கெட்டப்பில் தயாராகியுள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கி நடிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை அனிகா சுரேந்திரன் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

 

நடிகர் தனுஷ் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் 15ம் தேதா வெளியாகவுள்ளது. நடிகர் தனுஷ் அவர்கள் இயக்குநர் சேகர் கம்மூலா இயக்கும் திரைப்படத்திலும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்திலும் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.