நமது முன்னோர்கள் நமது வீடுகளில் உள்ள திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களை நீக்க இந்த படிகாரத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த படிகாரக் கல் இருக்கக்கூடிய இடத்தில் கண் திருஷ்டி, தீய சக்திகள், எதிர் எதிர்மறை ஆற்றல்கள் போன்ற எதனையும் உள்ளே வர அனுமதிக்காது. இத்தகைய மகத்துவம் நிறைந்த படிகாரத்தை காலப்போக்கில் மக்கள் பயன்படுத்துவதை குறைத்து விட்டனர். இன்னும் சொல்லப்போனால் படிகாரத்தை பற்றி தெரியாதவர்கள் தான் நிறைய பேர் உள்ளனர்.
நாம் இரவில் தூங்கும் பொழுது ஏதேனும் ஒரு கெட்ட கனவு வந்து கொண்டே இருக்கிறது அல்லது தூங்க செல்லும் பொழுது ஏதேனும் ஒரு கெட்ட நினைவுகள் கண்முன்னே வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் தூங்குவதற்கு முன்பு தலையணைக்கு அடியில் இந்த படிகார கல்லை வைத்து தூங்குவதன் மூலம் கெட்ட கனவுகள் எதுவும் ஏற்படாது.
இவ்வாறு தூங்கும் பொழுது மட்டும் ஏற்படாமல் பகலிலும் வீட்டில் இருக்கும் பொழுது ஏதேனும் ஒரு கெட்ட நினைவுகள் அல்லது எதிர்மறை ஆற்றல்கள் இருப்பதாக உணர்ந்தால், வீட்டின் தெற்கு பகுதியில் இந்த படிகார கல்லை வைக்கலாம். ஒவ்வொரு அறையிலும் வைக்க முடியும் என்பவர்கள் அனைத்து அறையிலுமே வைத்துக் கொள்ளலாம். முடிந்தால் வீட்டின் தெற்கு பகுதியில் ஒரு சிறிய டம்ளரில் தண்ணீர் ஊற்றி அதனுள் இந்த படிகார கல்லை போட்டு வைக்கலாம். இவ்வாறு வீட்டில் வைப்பது நேர்மறை ஆற்றல்களை நமக்கு தருவதோடு மட்டுமல்லாமல், வீட்டின் அழகு பொருளாகவும் மற்றவர்களுக்கு காட்சியளிக்கும்.
தொழில் செய்யும் இடத்தில் அல்லது வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது அல்லது வீட்டில் இருப்பவர்களோ வெளியில் இருப்பவர்களோ ஏதேனும் ஒரு இடையூறு செய்து கொண்டே இருக்கிறார்கள் என்றால், நமது ஆள்காட்டி விரலின் அளவிற்கு நிலக்கரி மற்றும் படிகாரக் கல்லை ஒரு கருப்பு துணியில் கட்டி அதனை இரவு தூங்குவதற்கு முன்பு நமது கைகளில் சிறிது நேரம் வைத்துக் கொண்டு பின்பு தலையணைக்கு அடியில் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு திங்கள்கிழமை அல்லது வெள்ளி கிழமைகளில் செய்வது சிறந்த பலனைத் தரும்.
இரவில் இவ்வாறு வைத்து தூங்கிவிட்டு மறுநாள் காலையில் அதனை எடுத்து நமது வீட்டில் இருந்து ஒரு 100 அடி தூரம் ஆவது சென்று அதனை ஒரு மரத்தின் அடியில் போட்டு விட வேண்டும். பின்பு வீட்டிற்கு வந்து குளித்து விடுவதன் மூலம் நமது வீட்டிலும் நம்மிடமும் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
நமது வீட்டின் பீரோவில் பணம், நகை போன்றவை வைத்துள்ள இடங்களில் இந்த படிகார கல்லை வைப்பதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். ஆனால் பண வரவிற்காக வைக்கக்கூடிய இந்த படிகார கல் சரியாக 60 கிராம் இருக்க வேண்டும். அது இரண்டு அல்லது மூன்று துகள்களாக இருந்தாலும் பரவாயில்லை. இவ்வாறு வைப்பதன் மூலம் கண்டிப்பாக பணவரவு அதிகரிக்கும்.