பூனைக்குட்டி புலியாக மாறிய கதை… ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!!

0
205

பூனைக்குட்டி புலியாக மாறிய கதை… ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது…

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். பல முன்னணி நடிகர்கள் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ள ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் பத்தாம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தற்பொழுது வெளியாகியுள்ள டிரெய்லரில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்குறிய காட்சிகள் மாஸாக உள்ளது. இந்த டிரெய்லரில் நடிகர் சுனில், நடிகர் ஜேக்கி ஷெரூப், நடிகர் சரவணன், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் வசந்த் ரவி, நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு, குழந்தை நட்சத்திரம் ரித்விக், நடிகை மிர்னா மேனன், மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர்களுக்கான சிறு சிறு காட்சிகள் இடம்பெற்றுள்ளது. நடிகர் சிவராஜ்குமார், நடிகர் மோகன்லால் ஆகியோர்களுக்கான காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களை இந்த டிரெய்லரில் காட்டவில்லை.

இருப்பினும் டிரெய்லரில் வரும் இரண்டு வசனங்கள் கவனம் ஈர்த்துள்ளது. டிரெய்லரின் கடைசி சில நொடிகளில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் காவல்துறைக்கான ஆடையை அணிந்து கொண்டு சிறைக்குள் செல்வது போல காட்டப்படுகின்றது. இதனால் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலராக நடித்திருப்பார் என்று தெரிய வருகின்றது. இந்த டிரெய்லரை பார்க்கும் பொழுது இந்த முறை மிஸ் ஆகாது என்ற டயலாக் நினைவிற்கு வந்தாலும் ஜெயிலர் திரைப்படம் கமெர்சியல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று ஆகஸ்ட் பத்தாம் தேதி தெரிய வரும்.

Previous articleபனிப்பாறைக்குள் சிக்கிய மலையேற்ற வீரர்… 37 ஆண்டுகளுக்கு பிறகு சடலமாக மீட்பு…
Next articleசெங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள்… விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்!!