மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

0
93

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள். அஷ்டமா ராசியில் சந்திர பகவான் உள்ளதால் பேசும் வார்த்தைகளில் கனிவாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அமைதியாக செயல்படுவது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வியாபாரிகளையும் அனுசரித்து செல்வது அவசியம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் இழுபறி ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எல்லா விஷயத்திலும் உஷாராக இருக்க வேண்டும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani