மாநாடு படத்தின் வெற்றியால் மீண்டும் வேதாளம் ஏறிய சிம்பு??

Photo of author

By Janani

மாநாடு படத்தின் வெற்றியால் மீண்டும் வேதாளம் ஏறிய சிம்பு??

சமீபத்தில் சிம்பு நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. மாநாடு படத்தின் வெற்றி,அதை தொடர்ந்து வந்த வெந்து தணிந்து காடு படத்தின் கிளிம்ப்ஸ் சிம்பு மீதான எதிர்பார்ப்பை கூட்டியது.

மாநாடு வெற்றியை கொண்டாடும் வகையில் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி. விழாவில், படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகள் வந்திருந்தனர். விழாவிற்கு சிம்பு மட்டும் வராததை மேடையிலே கண்டித்தார் இயக்குனர் மற்றும் நடிகர் விஜய் தந்தையான S.A.சந்திரசேகர்.

வெற்றியின் மமதையால் தான் சிம்பு வரவில்லை,மீண்டும் TR பேச்சை கேட்டு தயாரிப்பாளர்களை சிம்பு மதிக்காமல் போனால் அவரது வளர்ச்சி அதல பாதாளத்திற்கு சென்று விடும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரப்பாக பேசுகின்றனர்.

ஏற்கனவே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் TR க்கும் சாட்டிலைட் உரிமை தொடர்பான விஷயத்தில் பிரச்னையானது. அதனை தொடர்ந்து இந்த விழாவில் சிம்பு கலந்து கொள்ளாததால் மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார் நடிகர் சிம்பு.

மாநாடு படம் படத்தின் வசூல் 100 கோடியை எட்டும் நிலையில்,இந்த சர்ச்சை அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.