மீன ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு பயண வாய்ப்புகள் கைகூடும் நாள்!!

0
223
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

 

மீன ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு பயண வாய்ப்புகள் கைகூடும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் கைகூடும் நாள். பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் திடீர் பிரயாணம் வரலாம். பிரயாணம் மூலம் நிறைய நன்மைகள் கிடைப்பதால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நிதி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும்.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உண்டாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பயண வாய்ப்புகள் மேம்படலாம். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை அனுபவிப்பார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில செலவுகள் வந்து சேரலாம். அரசியல்வாதிகள் முக்கிய பிரபலமாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்ப ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleசுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை! மருத்துவர் பரபரப்பு பேட்டி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here