முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி:? அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

0
138

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி:? அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்,கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் இரண்டு மாதங்கள் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இயற்கை எய்தினார்.தற்போது வரை இவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.இதனைத் தொடர்ந்து,முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்,
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்களின் சாட்சியம் தவறாக உள்ளதாக கூறி கமிஷன் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது.ஆனால் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஆனால் உயர் நீதிமன்றம் அளித்த இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இந்த மனு குறித்து மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ஆறுமுகசாமி கமிஷன் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அளித்த இந்த இடைக்கால தடையை விலக்க கோரி தமிழக அரசு சார்பில்,மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கானது நேற்று,உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,
ஏ.எம். கான்வில்கர்,சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வழக்கினை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு அளித்த மனுவிற்கு இரண்டு வாரத்திற்குள் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சரியான பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை,அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Previous articleதினமும் இந்த ஒரு இலையை சாப்பிட்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!
Next articleஇந்த ராசிக்கு தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்! இன்றைய ராசி பலன் 25-09-2020 Today Rasi Palan 25-09-2020