ரேஷன் கடைகளின் இருப்பு விவரம் இனி உங்கள் கைகளில்.. தமிழக அரசு வெளியிட்ட கூல் அப்டெட்..!

0
142

தங்களது அடிப்படை உணவு பொருள் தேவைக்காக பலர் ரேஷன் கடைகளை நம்பியுள்ளனர். இந்நிலையில் ரேஷன் கடைகள் திறக்கும் நேரங்களில் தங்களது வேலைகளை விட்டு விட்டு அவர்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி வருவர். பல நேரங்களில் அவர்கள் வாங்க செல்லும் நேரங்களில் பொருட்கள் தீர்ந்து போகவும் வாய்ப்புள்ளது. இதனால், அவர்களின் நேரம் மற்றும் உடல் உழைப்பு வீணாகிறது.

அதே போல சில ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு குறித்து சரியான தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை. இவற்றையெல்லாம் சரிசெய்யும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வசதி என்னெவெனில் இனி உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளின் இருப்பு விவரம் குறித்து 97739 04050 என்ற எண்ணிற்கு எஸெமெஸ் அனுப்புவது மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ரேஷன் அட்டையில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து 97739 04050 பிடிஎஸ் என டைப் செய்து இடைவெளி விட்டு 101 என டைப் செய்து அனுப்பி வைத்தால் உங்கள் ரேஷன் கடையின் இருப்பு விவரம் தெரிந்து விடும். அதே போல பிடிஎஸ் 107 என எஸ்எம்எஸ் அனுப்பினால் உங்கள் ரேஷன் கடை திறந்துள்ளதால் இல்லையா என தெரிந்து விடும்.

ரேஷன் கடைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பிடிஎஸ் 107 என பதிவு செய்து 97739 04050 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த சேவைகள் அனைத்தும் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்தே பெற முடியும் என்பதால் மொபைல் எண் பதிவு செய்யாதவர்கள் புதிய எண் மாற்ற வேண்டியவர்கள் அனைவரும் உணவு வழங்கல் அதிகாரிகளாய் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபிரசவத்திற்கு வந்த பெண்.. தவறான சிகிச்சையால் பலியா? உறவினர்கள் போராட்டம்..!
Next articleதிருப்பதி ஏழுமலையானை காண செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! இதற்கான முன்பதிவு தொடக்கம்!