வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேனு சொல்லு… மீண்டும் ஸ்மார்ட் போன் விற்பனையில் களமிறங்கிய மோட்டோ நிறுவனம்!!

0
159
வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேனு சொல்லு… மீண்டும் ஸ்மார்ட் போன் விற்பனையில் களமிறங்கிய மோட்டோ நிறுவனம்…
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மோட்டோ நிறுவனம் மீண்டும் ஸ்மார்ட்போன் விற்பனையில் இறங்கியுள்ளது. அந்த வகையில் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் மேட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனுக்கு மோட்டோ ஜி14 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிடைக்கின்றது. இந்த புதிய மோட்டோ ஜி14 ஸ்மார்ட் போன் 9999 ரூபாய்க்கு விற்பனை ஆகவுள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதியில் இருந்து மோட்டோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான  மோட்டோ ஜி14 மொபைலை பிளிப்கார்ட் வலைதளத்தில் மூலம் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இந்த புதிய மோட்டோ ஜி14 ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்…
* 6.5 இன்ச் புல் ஹெச்.டி ஸ்கிரீன்
* யுனிசாக் டி616 பிராஸசர்
* 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் மற்றும் கூடுதலாக மெமிரியை நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்ட் 13 ஓ.எஸ்
* 50 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா.
* 8 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமரா
* கைரேகை சென்சார்
* IP52 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெஸிஸ்டன்ட்
* 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 20 வாட் திறன் கொண்ட பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் யு.எஸ்.பி டைப் சி போர்ட்
* 4ஜி வோல்ட் இ நெட்வொர்க், பிளூடுத், வைபை
* ஸ்கை புளூ மற்றும் ஸ்டீல் கிரே என இரண்டு நிறங்களில் மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் விற்பனையாகவுள்ளது.
Previous article“நான் முதல்வன்” மாணவர்களுக்கு ரூ.7,500  ஊக்கத்தொகை!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!
Next article6 அடி நீளம் உடைய தோசை… முழுவதுமாக சாப்பிட்டால் 11000 ரூபாய் பரிசு… இணையத்தில் வைரலாகும் ஹோட்டலின் அறிவிப்பு…