பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு!

Photo of author

By Sakthi

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு!

Sakthi

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு!
மெட்டா நிறுவனம் தனது பணியாளர்களில் 21000 பேரை வேலைநீக்கம் செய்ய 1 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில 8000 கோடி ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டு சுமார் 21000 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. பொருளாதார சரிவை மேற்கொள்ளவும், நிறுவன மறுகட்டமைப்பை மேற்கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையடுத்து மெட்டா நிறுவனம் 2023 ஆண்டின் காலாண்டு முடிவுகளை பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற அறிக்கையில்  சமர்பித்தது. இந்த அறிக்கையில் மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள செலவு செய்த தொகை பற்றிய விவரங்களும் அடங்கியுள்ளது.
அந்த அறிக்கையின்படி மெட்டா நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய 1 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் 8000 கோடி ரூபாய்) செலவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் தனிப்பட்ட செலவுகளுக்கு மட்டுமே 1 பில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.