தினமும் 1 நிமிடம் போதும் உங்கள் மெலிந்த உடல் குண்டாக மாற!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Selvarani

தினமும் 1 நிமிடம் போதும் உங்கள் மெலிந்த உடல் குண்டாக மாற!! உடனே ட்ரை பண்ணுங்க!!

உடல் எடை அதிகமாக இருப்பது எவ்வளவு தீவிரமான பிரச்னையோ, அதேபோல தீவிரம்கொண்டது எடை குறைந்து, உடல் மெலிந்திருப்பது! அப்படி எடை குறைந்து இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

ஆரோக்கியத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் வராத வகையில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய நவதானிய வகைகளை கொண்டு நம் உடல் எடையை அதிகரிக்கச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
1. கேழ்வரகு
2. சாமை
3. திணை
4. வரகு
5. குதிரைவாலி
6. கம்பு
7. சோளம்
8. கோதுமை
9. மூங்கில் அரிசி
10. சிவப்பு அரிசி

இந்த நவதானிய வகைகளை சம அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதனை மிதமான சூட்டில் நன்கு வறுத்து அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளுங்கள். நவதானிய பொடியை கஞ்சி செய்து தினமும் பருகி வருகையில் கலோரியின் அளவு அதிகம் கிடைத்து எடை அதிகரிக்க உதவுகிறது.

உடல் எடை குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிக கலோரி உள்ளதால் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.

எடை அதிகரிக்க அற்புத பானம்:
தேவையான பொருட்கள்:

1. வாழைப்பழம்-1
2. முந்திரி-5
3. திராட்சை-10
4. பேரிச்சம் பழம் -3
5. பால்
6. தேன்

ஒரு டம்ளர் பாலுடன் இந்த பொருட்களை சேர்த்து அரைத்து தேன் கலந்து தினமும் குடித்து வரும் பொழுது உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.