ஒரு லிட்டர் கழிவு நீரில் 10.41 கோடி கொரோனா வைரஸ்கள்! அதிர்ச்சியளிக்கும் இந்திய ஆய்வு

Photo of author

By Pavithra

ஒரு லிட்டர் கழிவுநீரில் 10.41 கோடி வைரஸ்கள் உள்ளதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்திய ஆராய்ச்சியாளர்கள் அகமதாபாத்தில் கடந்த மே 8 தேதியும் 27ஆம் தேதியும் கழிவு நீரை சேகரித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு அறிக்கையை சயின்ஸ் ஆப் தி டோட்டல் என்விரான்மென்ட்’ என்னும் சர்வதேச இதழில் கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது கொரோனா தொற்று பாதிப்படைந்தோரின் சிறுநீரிலிருந்து தொற்றின் வேகம் இருமடங்காக இருக்கிறது என்று கூறுகின்றனர். கொரோனாத் தொற்று பாதிப்பு அடைந்தவர் வெளியேற்றும் சிறுநீரில் 15000 முதல் 10.41கோடி வரையிலான வைரஸ் மூலக்கூறுகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

அகமதாபாத்தில்மே 8ஆம் தேதி கண்டறியப்பட்ட வைரஸின் அடர்த்தியை விட, மே 27ம் தேதி கண்டறியப்பட்ட வைரசின் அடர்த்தி 10 மடங்காக உள்ளது. இவற்றை தொடர்புபடுத்தினால், அகமதாபாத்தில் மே 8ம் தேதியை விட, 27ம் தேதி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்ததுள்ளது என்பது உறுதியாகிறது.

அதே நேரம், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் எவ்வித வைரஸ் மூலக்கூறுகளும் இல்லை. போலியோ வைரஸ், ஹெபடைடிஸ் ஏ போன்ற தொற்றுகள் பரவினாலும் இந்த சோதனை முறையின் மூலம் எளிதில் அவற்றை கண்டறிய முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு நாளைக்கு 10.60 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை வந்து அடைகிறது.

சுத்திகரிக்கப்படாத நீரில் வைரசின் மூலக்கூறுகளின் ஆர்என்ஏ.க்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் மூலம், பெருமளவிலான மக்களுக்கு கொரோனா வைரஸ் இவ்வாறு பரவ வாய்ப்புள்ளது. இவ்வாறு இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்புக்கு உலக விஞ்ஞானிகளிடம் இருந்து பாராட்டு குவிந்துள்ளது.