கோலாகலமாக தொடங்கியது ஓணம் பண்டிகை

Photo of author

By Sakthi

கேரள மாநில மக்களின் பாரம்பரிய விழாவான திருவோண திருவிழா எதிர்வரும் 21ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கேரளாவை ஆண்டு கொண்டிருந்த மாவேலி மன்னன் மக்களை பார்க்க வரும் நாளே திருவோண பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்த தினங்களில் மக்கள் வீடுகளின் முன்பு அத்திப்பூ கோலமிட்டு மன்னனை வரவேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது. பத்து தினங்கள் நடைபெறும் இந்த திருவிழா இன் நேற்றைய தினம் ஆரம்பமாகியிருக்கிறது. அதனடிப்படையில் அஸ்தம் திருவிழா நேற்றைய தினம் நடைபெற்றது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளுக்கு மன்னர் கோலம் இடுவார்கள். இந்த தினங்களில் மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது. சென்ற வருடம் நோய்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த பண்டிகையை கொண்டாட படவில்லை.

இந்த வருடம் நோய்த்தொற்று பிரச்சனை இதுவரையில் முற்றுப்பெறவில்லை. இருந்தாலும் இந்த முறை கேரள மாநில அரசு நோய்த்தொற்று ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து இருப்பதன் காரணமாக, பொது மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கட்டுப்பாடுகளுடன் ஆரம்பித்திருக்கிறார்கள்.