சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு!

0
291
10 lakh compensation for the family of Muthumano who died in jail! Chief Announcement!
10 lakh compensation for the family of Muthumano who died in jail! Chief Announcement!

சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு!

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஒரு நபர் சிறையிலேயே இறந்துள்ளார்.இதுகுறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பூலம் குறுவட்டம், பூலம் பகுதி-2  கிராமத்தில், கருணாநிதி தெரு, வாகைகுளம் என்ற முகவரியில் வசிக்கும் பாபநாசம் என்பவரின் மகன்முத்துமனோ.  27 வயதான இவர் ஏப்ரல் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்துள்ளார்.

இந்நிகழ்வு தொடர்பாக பெருமாள்புரம் காவல்நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்த முத்து மனோவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்தாரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளது.

மேற்படி சம்பவத்திற்கு காரணமான பாளையங்கோட்டை சிறைச்சாலை பணியாளர்கள் 6 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது வழக்கானது குற்றப்புலனாய்வு பிரிவிற்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் அவர் கூறியுள்ளார்

Previous articleமருத்துவர்களின் ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துமா? – தே.மு.தி.க.  தலைவர் விஜயகாந்த்!
Next articleஇந்த ராசிக்கு பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும்- 02-07-2021 Today Rasi Palan 02-07-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here