23 வயதுள்ள இளைஞருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்… iQOO நிறுவனத்தின் அதிரடி முடிவு!!

Photo of author

By Sakthi

23 வயதுள்ள இளைஞருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்… iQOO நிறுவனத்தின் அதிரடி முடிவு!!

Sakthi

Updated on:

 

23 வயதுள்ள இளைஞருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்… iQOO நிறுவனத்தின் அதிரடி முடிவு…

 

சீனா நாட்டின் பிரபல iQOO நிறுவனம் 23 வயதுள்ள இளைஞர் ஒருவரை 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் கேமிங் அதிகாரியாக நியமித்துள்ளது.

 

சீன நாட்டின் பிரபல எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக iQOO நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. iQOO நிறுவனம் பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.

 

iQOO நிறுவனம் ஸ்மார்ட்போன், சார்ஜர், இயர் போன், டேட்டா கேபிள் போன்றவற்றை தயாரித்து வருகின்றது. இந்நிலையில் பயனாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் விதத்தில் தலைமை கேமிங் அதிகாரியை iQOO நிறுவனம் நியமனம் செய்துள்ளது.

 

தலைமை கேமிங் அதிகாரி பணிக்கான தேடல் சுமார் 3 மாதங்களாக நடந்து வந்தது. தலைமை கேமிங் அதிகாரி பணிக்காக 60000 விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. கேமிங் என்கேஜ்மென்ட் மற்றும் அனுபவத்தை மறுவரையறை செய்வது அதன் மூலமாக நிறுவனத்திற்கு உதவா செய்வது தான் தலைமை கேமிங் அதிகாரியின் பிரதான பணியாகும்.

 

60000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தலைமை கேமிங் அதிகாரி பணிக்கு அனைத்து தகுதியும் உள்ள உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஸ்வேதங்க் பாண்டே என்பவர் தேர்வு செய்யப்பட்டார். கேமிங் சார்ந்த திறன், தகவல் தொடர்பு திறன்கள் ஆகிய காரணத்திற்காக ஸ்வேதங்க் பாண்டே அவர்கள் இந்த பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

தலைமை கேமிங் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்வேதங்க் பாண்டே அவர்களுக்கு மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படவுள்ளது. சுமார் 6 மாத காலம் என்ற ஒப்பந்த அடிப்படையில் ஸ்வேதங்க் பாண்டே அவர்கள் தலைமை கேமிங் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் இவர் தான். ஸ்வேதங்க் பாண்டே அவர்கள் அந்த பணியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாக கூறினார்.