குறைந்த வட்டியில் ரூ.100 கோடிக்கு கடன்!! தமிழக அரசின் அட்டகாசமான திட்டம்!!

Photo of author

By Jeevitha

தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் சில்லறை வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலம் ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

தற்போதைய சூழலில் சிறு வியாபாரிகளுக்கு தேவையான கடன்களை பெற மக்கள் வெளியில் கடன் வாங்கினால் அவர்கள் மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, ராக்கெட் வட்டி என அதிக பணத்தை சுரண்டுகிறார்கள். அதனால் சிறு வியாபாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் தமிழக அரசு தாட்கோ நிறுவனம் மூலம் கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி சிறு வியாபாரிகளுக்கு  கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதில் முதலாவதாக காய்கறி சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது. இதில் மொத்தம் 250 நபர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நபருக்கு ரூ.1,25,000 என்ற வீதம் கடன் வழங்கப்பட்டது. அந்த கடனை வியாபாரிகள் வாங்கிய குறுகிய காலத்தில் கட்டி முடித்தால் மீண்டும் அவர்களுக்கு கடன் வழங்கப்படும். மேலும் இந்த திட்டம் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தலாம் என ஆலோசனை நடத்துவதாக தாட்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த கடன் பெற்ற 3 வருடங்களுக்குள் கடனை அடைக்க வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சில்லறை வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த கடன் தாட்கோ மூலம் உருவாக்கப்பட்ட சங்ககளில் கடன் பெறலாம் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகள் இந்த திட்டத்திற்கான தகுதி உடையவர்கள். மேலும் 72999 13999  என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.