100 லட்சம் கோடியில் பிரதமர் சொன்ன அறிவிப்பு! இளைஞர்களுக்கு மகிழ்ச்சிதான்!

Photo of author

By Hasini

100 லட்சம் கோடியில் பிரதமர் சொன்ன அறிவிப்பு! இளைஞர்களுக்கு மகிழ்ச்சிதான்!

இந்தியா முழுவதும் இன்று 75 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் காரணமாக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். அதன் பின் மக்களுக்கு அவர் வாழ்த்துக்களையும் நினைவு கூர்ந்தார். மேலும் நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்ட தலைவர்களையும் நினைவு கூர்ந்தார்.

அதனை தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், 100 லட்சம் கோடி ரூபாயில் கதிசக்தி திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திர தின உரையில் மோடி கூறியதாவது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில் 100 லட்சம் கோடி மதிப்பு கதிசக்தி திட்டம் அமல்படுத்தப்படும்.

பிரதம மந்திரி தேசிய திட்டம் மூலம் புதிய பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவாக்கப்படும். இந்தியாவை உலகின் பச்சை ஹைட்ரஜன் மையமாக உருவாக்க தேசிய ஹைட்ரஜன் திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம் மிகப்பெரிய ஹைட்ரஜன் ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுக்கும்.

இன்று 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, 75 வந்த பாரத் ரயில் சேவையை விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். இதனை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் ரயில் சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மியான்மர் வங்கதேசம் தென்கிழக்கு ஆசியா பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்துகள் கிடைக்கவும் வழி செய்யப்படும் என்றும் அதில் கூறி இருந்தார்.