100 மீட்டர் அளவு ராமேஸ்வரம் கடல் உள்வாங்கியது! இது என்ன சுனாமி எச்சரிக்கையா!?

0
175
100 meters of Rameswaram sea absorbed! What is this Tsunami Warning!?
#image_title

100 மீட்டர் அளவு ராமேஸ்வரம் கடல் உள்வாங்கியது! இது என்ன சுனாமி எச்சரிக்கையா!?

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலானது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஒரு புனித தலமாகும்.
இந்தியாவில் உள்ள 12 ஜோதி லிங்க தலங்களோடு இந்த கோவிலும் ஒன்றாக கருதப்படுகின்றது.

இந்த பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்த லிங்க கடலில் நீராடி விட்டு செல்வது வழக்கம். மேலும் கோவிலின் சுற்றுப்புறத்தில் 22 வகையான புனித தீர்த்தங்களும் அமைந்திருக்கும்.
இந்தத் தீர்த்தங்கள் இக்கோவிலுக்கு மேலும் ஒரு சிறப்பை பெற்று தருகிறது.

இதனை தொடர்ந்து பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்த லிங்க கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது கடலானது 100 மீட்டர் வரை உள்வாங்கியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.கடல் உள்வாங்கியதில்,கடலுக்கு அடியில் போடப்பட்டிருந்த சிலைகள், பாறைகள், என அனைத்துமே வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பீதியை அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆய்வாளர்கள் கூறுவது: இயற்கை மற்றும் காலநிலை மாற்றத்தினால் தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது எனவும்,இது சிறிது நேரத்திலேயே மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். யாரும் பயப்படத் தேவையில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleவிடுமுறை முடிந்த பின் வேலைக்கு படையெடுத்த பொதுமக்கள்! கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மாநகரமே பாதிப்பு!
Next articleபிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே அதிக பெயரால் நாமினேட் பட்டவர் யார் தெரியுமா? ஜோவிகா தான்!