இவர்களுக்கெல்லாம் தமிழக அரசால் 1000 தரப்படுகிறது!! அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!!

0
285
1000 is given by the Tamil Nadu government to all of them!! Government employees are happy!!
1000 is given by the Tamil Nadu government to all of them!! Government employees are happy!!

இவர்களுக்கெல்லாம் தமிழக அரசால் 1000 தரப்படுகிறது!! அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக சட்டசபை கூட்டத்தொடர், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால் நாள்தோறும் மக்களுக்கு புது புது திட்டங்கள் அறிவிக்கப்படுள்ளன.மேலும் பழைய திட்டங்களுக்கான தொகுப்பூதியமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.மேலும் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு என்று அடுத்தடுத்து பல்வேறு முக்கிய நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்த்தப்படுள்ளது.

எனவே தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 46% இருந்து 50 % மாறியுள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.அம்மா உணவக சிற்றுண்டிகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) பாத்திரங்கள், சமையல் சாமான்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகம் என்பது ஏழை மக்கள் மிக குறைந்த விலையில் பசியாற கொண்டு வரப்பட்ட திட்டம் என்பது குறிப்பிட்டத்தக்கது.மேலும் அம்மா உணவக மெனு கார்டுகளில் கவனம் செலுத்தி, அட்டவணைகள், விளக்குகள் மற்றும் புதிய பாத்திரங்களைச் சரிசெய்வதற்கான மதிப்பீடுகளைத் தயாரிக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.இதன் மூலம் அம்மா உணவகங்கள் புதிய பொலிவு பெற உள்ளன.

அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.ரூ.300 ஆக இருந்த தினக்கூலி பணியாளர்களின் ஊதியத்தை ரூ.325 ஆக உயர்த்த மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்த திட்டங்கள் :
தற்போது கோவிலில் பணிபுரியும் இசைக்கலைஞர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி நிதிவசதியற்ற திருக்கோயில்களில் குறைந்த மாத ஊதியம் பெற்று வரும் இசைக்கலைஞர்களுக்கு இனி மாதம் ரூ.10,000/- தொகுப்பூதியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.இது போக 9 கோடி செலவில் இரண்டு திருக்கோயில்களில் புதிய தங்கத்தேர்கள் செய்யப்படும்.அவை கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் மற்றும் தென்காசி மாவட்டம், இலஞ்சி அருள்மிகு இலஞ்சிகுமாரர் திருக்கோயிலும் ஆகும்.

மேலும் புதிதாக திருமணம் செய்ய வரும் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000/- மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கப்பட்டு திருக்கோயில் மண்டபங்களில் கட்டணமின்றி திருமணங்கள் நடத்தி வைக்கப்படும் எனவும்,மேலும் ரூ.1.58 கோடியில் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணம் செல்லலாம் என்கின்ற புதிய திட்டமும் அவருடைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Previous article உங்கள் ஸ்மார்ட் போன் ஓவர் ஹீட்டாவதை தடுக்க உதவும் பெஸ்ட் டிப்ஸ்!!
Next articleசெங்கோலால் டெல்லியில் பரபரப்பு!! மன்னராட்சி அரசியலா எதிர் கட்சிகள் கேள்வி??