மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள்!! ப. சிதம்பரம் தெரிவித்த கருத்து!!

Photo of author

By Sakthi

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள்!! ப. சிதம்பரம் தெரிவித்த கருத்து!!
மறுபடியும் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தாலும் நான் வியப்படையமாட்டேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இன்று இராஜிவ் காந்தி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய பிறகு ப. சிதம்பரம் அவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி அவர்களின் 32வது நினைவு தினம் இன்று அதாவது மே 21ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள இராஜிவ் காந்தி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பிறகு முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் அவர்கள், “2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் பொழுதே மக்கள் இதற்கு வரவேற்பு அளிக்கவில்லை. 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் புறக்கணித்தனர். இப்பொழுது பெரிய நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் கைவசம் மட்டும் தான் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளது. இப்போதாவது திருத்தி கொண்டதில் மகிழ்ச்சி.
விரைவில் 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்திற்கு கொண்டுவந்தாலும் ஆச்சரியப்படமாட்டேன். வியப்படையமாட்டேன்” என்று கருத்து தெரிவித்தார். இந்த நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் அவர்களுடன் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.