மாணவிகள் உதவி தொகை பெற உடனே விண்ணபியுங்கள்; தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!

0
90

தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களில் விண்ணப்பிக்க திருநங்கை, திருநம்பி நிபந்தனைகள் தளர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் திருநங்கை மற்றும் திருநம்பி மற்றும் இடை பாலினத்தவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழத்தில் படித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி தற்போது உத்தரவு வெளியாகி உள்ளது.

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்பு இருந்தது. ஆனால் தற்போது திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு இந்த நிபந்தனைகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளது..

பட்டையும் மற்றும் தொழிற்படிப்பு படிக்கக்கூடிய திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனத்தின் மூலம் யூ எம் ஐ எஸ் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி, உயர் கல்வி, ஆராய்ச்சி கல்விக்கு தமிழக அரசு முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. அரசு பள்ளி மாணவிகள் அதிக அளவில் உயர்கல்வி படிக்க புதுமைப் பெண் திட்டம் பெரிதும் உதவுகின்றது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்விகள் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் இத்திட்டத்தின் மூலமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு நிதி நெருக்கடி காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவிகளை அனுப்ப முடியாத சூழல் நிலவி வருவதால் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு உதவும் வகையில் கடந்து 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலமாக அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பாட பிரிவினை முடிக்கும் வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

Previous articleChatGPT-யிடம் எதையெல்லாம் கேட்க கூடாது! அந்த 5 முக்கியமான விஷயங்கள்!
Next articleபெண்களின் வங்கி கணக்கில் இனி 1500 கிரெடிட் ஆகும்; அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!