அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் 10 ஆயிரம் பரிசு! தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Photo of author

By Janani

அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் 10 ஆயிரம் பரிசு! தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Janani

Updated on:

10000 prize if you travel in government buses Nadu Transport Corporation Notification

அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் 10 ஆயிரம் பரிசு! தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தலைநகரமான சென்னை மாவட்டத்தில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை சேர்ந்த பல தரப்பட்ட மக்கள் வேலை செய்து வருகின்றனர்.இவர்கள் சென்னையிலேயே விடுதிகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.பெரும்பாலும் நெல்லை, மதுரை,கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம் இருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் வார விடுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு இங்குள்ள மக்கள் செல்வதால் அந்த தினங்களில் மட்டும் நிறைய பேருந்துகள் இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.அப்போது பல ஆம்னி மற்றும் தனியார் பேருந்துகள் அதிக கட்டணத்தை வசூல் செய்வதாக பயணிகள் சிலர் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன .மேலும் டிக்கெட் முன்பதிவு செய்ய https://www.tnstc.in என்ற இணையதள சேவை முறையும் நடைமுறையில் உள்ளது.
இந்தநிலையில் வார விடுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் பயணிகளின் வருகையை அதிகரிக்க தமிழக போக்குவரத்து கழகம் விதவிதமான திட்டங்களை முன்னேடுத்து வருகிறது.

அதில் குறிப்பிடத்தக்கது தான்,வேலை நாட்களில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிகையை கூடுதலாக்க ஒரு புது முயற்சியை கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. சூர்ய வம்சம் படத்தில் வருவது போல அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகளை குலுக்கல் முறையில் 13 பேரை தேர்ந்தெடுக்கிறது.

அதில் முதல் மூன்று பேருக்கு ரூபாய் 10,000-ம் மற்றும் அடுத்த பத்து நபர்களுக்கு ரூபாய் 2000-ம் வழங்கப்படுகிறது.இந்த திட்டம் பொது மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.