105 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமையவுள்ள விளையாட்டு நகரம்! தமிழ்நாட்டில் எந்த இடத்தில் என தெரியுமா?
தமிழ்நாடு மாநிலத்தில் 105 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் விளையாட்டு நகரம் அமையவுள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செம்மஞ்சேரியில் தான் இந்த பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமையவுள்ளது. மேலும் இந்த விளையாட்டு நகரம் 105 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
தமிழக அரசு தற்பொழுது விளையாட்டுக்கான மேம்பாட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றது. அதாவது தமிழ விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் திறமையை உலக அளவில் தெரியும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு முயற்சியும் எடுத்து வருகின்றது.
அந்த வகையில் சென்னையில் மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக உலகமே மெச்சும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது. அதன் பின்னர் சென்னையில் மகளிர் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இப்படி விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்தி வரும் தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள வீரர் வீராங்கனைகளின் திறமைகளை தேசிய அளவில் உலக அளவில் எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அது மட்டுமில்லாமல் உலக அளவில் தமிழ் நாட்டை விளையாட்டுக்கான இருப்பிடமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக தமிழக அரசு விளையாட்டு நகரம் அமைக்கும் பணியை கையில் எடுத்துள்ளது. இதற்காக முன்பு கூறியபடியே செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் அமையவுள்ள இந்த விளையாட்டு அரங்கத்தின் தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான போட்டிஙள் நடைபெறுவதற்கும் சர்வதேச அளவிற்கு நம்முடைய வீரர்களை தயார் செய்வதற்கும் இந்த விளையாட்டு நகரம் அமையவுள்ளது. மேலும் இந்த விளையாட்டு நகரத்தை கட்டும் பணியும் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த விளையாட்டு நகரத்தின் மாதிரிப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலாக பரவி வருகின்றது.
இந்த மாதிரிப் புகைப்படத்தில் மிகப்பெரிய முகப்பு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு கால்பந்து அரங்குகள், நான்கு டென்னிஸ் கோர்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது. தடகள விளையாட்டு போட்டிகளுக்கான அரங்குகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. உள் விளையாட்டு அரங்குகளும் இதில் அமைக்கப்பட்டு இருக்கின்றது. மற்ற விளையாட்டு அரங்குகள் முகப்பு அரங்குகளுக்கு பின்புறமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடக்க விழா நடைபெறுவதற்கான நிகழ்ச்சி அரங்கு, மிகப் பெரிய அளவிலான பார்க்கிங் வசதி ஆகியவையும் கூட இந்த மாதிரி புகைப்படத்தில் இருக்கின்றது. இந்த அரங்குகளின் மாதிரிப் புகைப்படங்களை பார்க்கும் பொழுது ஒலிம்பிக் போட்டிகள் கூட நடைபெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.