108 மெகா பிக்சல் கொண்ட புதிய ரியல் மி மொபைல்… இதன் விலை இவ்வளவு தானா!!

0
73

 

108 மெகா பிக்சல் கொண்ட புதிய ரியல் மி மொபைல்… இதன் விலை இவ்வளவு தானா…

 

ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் ஒன்றான ரியல் மி நிறுவனம் 108 மெகா பிக்சல் கொண்ட புதிய ரியல் மி மொபைலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த பதிவில் இதன் விலை மற்றும் அதன் பயன்பாடுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

 

ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் ஆப்பிள், சாம்சங்க், எம்.ஐ, விவோ, ஓப்போ, போக்கோ, சோனி மற்றும் பல சிறிய நிறுவனங்களும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

 

ரியல்மி 11 5ஜி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக சீனா நாட்டின் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வெர்ஷனில் இருந்த சில அம்சங்களை விட வித்தியாசமாக வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் 23502 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த புதிய ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட் போனின் அம்சங்கள்…

 

* மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ புராஸசர்.

 

* 6.72 இன்ஸ் அளவு கொண்ட திரை(Screen)

 

* முழுவதும் ஹெச்.டி கொண்ட திரை. அதாவது Full HD+1080×2400 பிக்சல் அளவு கொண்ட அமொலெட்(AMOLED) டிஸ்பிளே.

 

* 120 Hz ரிப்ரெஸ் ரேட்.

 

* 5000 MAH பேட்டரி மற்றும் விரைவாக சார்ஜ் ஆகும் 67வாட் சார்ஜிங் திறன் கொண்ட வசதி.

 

* 8 ஜிபி விரிச்சுவல் ரேம்(RAM) மற்றும் 256 ஜிபி ரோம்(ROM) மெமரி வசதி.

 

* ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ.

 

* 108 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி லென்ஸ். மேலும் செல்பி எடுப்பதற்கென 16 மெகா பிக்சல் கொண்ட கேமரா வசதி.

 

* 4ஜி எல்.டி.இ, புளுடூத், வைஃபை

 

* யு.எஸ்.பி டைப் சி போர்ட்.

 

* டான் கோல்ட் மற்றும் மூன் நைட் டார்க் என இரண்டு நிறங்களில் ரியல் மி 11 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கின்றது.