108 ஆம்புலன்சில் இவ்வளவு நவீன வசதிகளா:? துவங்கியது சேவை!

Photo of author

By Pavithra

108 ஆம்புலன்சில் இவ்வளவு நவீன வசதிகளா:? துவங்கியது சேவை!

Pavithra

108 ஆம்புலன்சில் இவ்வளவு நவீன வசதிகளா:? துவங்கியது சேவை!

108 ஆம்புலன்சில்,
மருத்துவமனைக்கு செல்லும் முன்பே நோயாளிகளின் உயிர் காக்கும் பொருட்டு,பல்வேறு நவீன வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது.

108 ஆம்புலன்சில் உள்ள நவீன வசதிகள் என்னென்ன?

நோயாளிகளை அவசர முதலுதவி சிகிச்சையளித்து காப்பாற்ற வசதியாக,108 ஆம்புலன்சில்,வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்,இருதயை இயக்கத்தை தூண்டும் நவீன கருவி,உயிர் காக்கும் மருந்துகளை தானியங்கி முறையில் வழங்கும் உயிர் காக்கும் கருவி,போன்ற கூடுதல் மருத்துவ வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நவீன வசதிகளை கொண்ட இரண்டு ஆம்புலன்களை,திருப்பூர் மாவட்டத்திற்கு நேற்று வழங்கப்பட்டது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்,திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் இந்த இரண்டு ஆம்புலன்ஸ்களையும் கூடுதல் மருத்துவ வசதிகள் குறித்து வாகனத்தின் உள்ளே பார்வையிட்டு பின்பு
நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.