திடீரென்று ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
131

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து கடந்த 2 வருட காலமாக பொது தேர்வு நடத்தப்படவில்லை.

தற்போது இந்த நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான நேரடி பொதுத்தேர்வு நடந்தது. அதனடிப்படையில் கடந்த மாதம் 6 ஆம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடந்தது.

இதில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒட்டுமொத்தமாக 9.55 லட்சம் மாணவ, மாணவிகள், தேர்வு எழுதினர். அதன்பிறகு கடந்த 1ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி சுமார் 83 மையங்களில் நடந்தது.

இந்த சூழ்நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் ஜூன் மாதம் 17ஆம் தேதி அதாவது இன்றைய தினம் வெளியிடப்படும் மாணவர்கள் தங்களுடைய முடிவுகளை இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியிருந்தது.

இந்த சூழ்நிலையில், தற்போது திடீரென்று இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியிடப்படும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூன் மாதம் 20ஆம் தேதி பகல் 12 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.

பொதுத்தேர்வு முடிவுகள் உள்ளிட்டவற்றையும் மாணவர்களும் அரசுத்தேர்வுகள் இயக்ககம் தனிப்பட்ட இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல அன்றைய தினமும் காலை 9 மணியளவில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் 10 மற்றும் 12 உள்ளிட்ட வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முதல் முறையாக ஒரே நாளில் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபல்வேறு மாநிலங்ககளில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் நெருக்கடி !  காரணம் என்ன ?
Next articleநாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு !